இந்தியா

மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கங்குலி

செய்திப்பிரிவு

மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணையத் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. கங்குலி திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை மாநில ஆளுநரிடம் அளித்துள்ளார்.

நீதிபதி கங்குலியிடம் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றியபோது அவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் வழக்கறிஞர் ஒருவர் அண்மையில் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மேற்கு வங்க மனித உரிமை ஆணைய தலைவர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலி யுறுத்தி வந்தனர். தன் மீது அபாண்ட மான குற்றச்சாட்டு சுமத்தப்படுவ தாக தெரிவித்த ஏ.கே.கங்குலி, பதவி விலக மறுத்துவிட்டார்.

இந்நிலையில் அவரை பதவி யில் இருந்து நீக்க குடியரசுத் தலை வருக்கு பரிந்துரை செய்ய மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் கங்குலியின் பதவியைப் பறிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி தெரி வித்திருந்தார். அதற்கு முன்ன தாகவே ஏ.கே. கங்குலி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இந்நிலையில் கங்குலிக்கு ஆதர வாக டாக்டர் பத்ம நாராயண் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கொல்கத்தா கால்பந்து குழு, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு இடையிலான பிரச்சினையில் நீதிபதி கங்குலி சமரசம் செய்தார். அந்த விவகாரத்தில் எழுந்த விரோதத்தின் காரணமாகவே கங்குலி மீது அபாண்டமாக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது என்று அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு நேர்மாறாக வழக்க றிஞர் குப்தா என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், பாலியல் புகார் தொடர்பாக கங்குலிக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த 2 மனுக்களும் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமை யிலான அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது இரு மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

SCROLL FOR NEXT