ராஜஸ்தானின் ஹனுமான்கர் மாவட்டத்தைச் சேர்ந்த காஷிஷ் என்ற 12 வயது சிறுமி புகை பழக்கத்துக்கு அடிமையான தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் அண்மையில் சுகாதார துறைக்கு கிடைத்தது.
அதில் புகை பழக்கத்தை விட்டுவிடும்படி தந்தைக்கு அறிவுரை வழங்கிய காஷிஷ், ‘‘நீங்கள் என்னோடு இல்லாமல் போய்விட்டால், உங்களது கனவு களை எப்பொழுது நான் நனவாக்க முடியும் என யோசிக்கிறேன். புகைப்பழக்கம் கொண்டவர்கள் விரைவிலேயே உயிரிழந்து விடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் உங்கள் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளேன். நீங்களும் என் மீது அளவுக்கடந்து பாசம் வைத்துள்ளீர்கள். தயவு செய்து புகைப்பழக்கத்தை விட்டு விடுங்கள்’’ என எழுதியிருந்தார்.
இந்த உருக்கமான கடிதத்தை கண்ட சுகாதார துறை, புகையிலை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு காஷிஷ்ஷையே தூதராக நியமித்தது.