பெங்களூருவில் இருந்து நேற்று காலை டெல்லி வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறங்கியது.
பயணிகள் மற்றும் ஊழியர்கள் 176 பேருடன் டெல்லி வந்த இந்த விமானத்தில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இது தொடர்பாக விமான நிறுவ னம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “ஸ்பைஸ்ஜெட் எஸ்ஜி 136 விமானத்தில் வந்த பயணிகள் உள்ளிட்ட அனைவரும் பத்திர மாக தரையிறங்கினர்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த விமானம் நேற்று காலை 8.45 மணிக்கு தரை யிறங்கியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.