இந்தியா

காங். கூட்டணிக்கு தாவிய புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி

செய்திப்பிரிவு

கேரள மாநிலம் கொல்லம் தொகுதி இடதுசாரிகளுக்கு சிக்கலான தொகுதியாகி விட்டிருக்கிறது. கொல்லம் தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் அரசியல் உயர்நிலைக் குழு உறுப்பினர் எம்.ஏ. பேபியை நிறுத்த மார்க் சிஸ்ட் கட்சி நினைத்திருந்தது. ஆனால், தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் இடதுசாரி ஜனநாயக முன்னணியிலிருந்து விலகி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்குத் தாவி விட்டது புரட்சிகர சோஷலிசக் கட்சி.

கொல்லம் தொகுதியை தனக்கு ஒதுக்கும்படி கோரியது புரட்சிகர சோஷலிசக் கட்சி. ஆனால், மார்க்சிஸ்ட் விட்டுத் தர மறுத்துவிட்டது. இதையடுத்தே கூட்டணியை மாற்றிவிட்டது புரட்சிகர சோஷலிசக் கட்சி.

காங்கிரஸ் கூட்டணி தரப்பில் கொல்லத்தில் புரட்சிகர சோஷ லிசக் கட்சியின் என்.கே. பிரேமச்சந்திரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பேபி மற்றும் பிரேமச் சந்திரன் இருவருமே கொல்லத்தில் பிரபலமான அரசியல் பிரமுகர்கள். மிக எளிதில் அணுகக் கூடியவர்கள்.

கொல்லம் தொகுதியில் பெரும் பாலும் இடதுசாரிகளே குறிப்பாக புரட்சிகர சோஷலிசக் கட்சியினரே வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸின் என். பீதாம்பர குரூப் இத்தொகுதியைக் கைப்பற்றினார். கடைசி நேர திருப்பங்களால் கொல்லம் தொகுதி கேரளத்தின் போட்டி மிகுந்த தொகுதிகளுள் ஒன்றாகிவிட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT