இந்தியா

மூன்று நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் மோடி

பிடிஐ

மூன்று நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.

மோடி அமெரிக்கா, நெதர்லாந்து, போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடிந்து கொண்டு இன்று (புதன்கிழமை) நாடு திரும்பினார்.

நாடு திரும்பிய மோடியை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேரில் வரவேற்றார். போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி புறபட்டுச் சென்றார்.

முதலாவதாக போர்ச்சுகலுக்கு சென்ற மோடி, அந்நாட்டு பிரதமர் அந்தோனியோ கோஸ்டாவை சந்தித்துப் பேசினார்.

அப்போது இரு நாடுகளுக்கும் இடையே தீவிரவாத தடுப்பு, விண்வெளி ஆராய்ச்சி, பருவ நிலை ஆராய்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்ற மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை முதன் முதலாக வெள்ளை மாளிகையில் சந்தித்தார். இவ்விருவரது சந்திப்பும் உலக நாடுகளால் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

இப்பயணத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாட்டுத் தலைவர்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து சென்றடைந்த மோடி அங்கிருந்த இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார்.

SCROLL FOR NEXT