லண்டனில் வாழும் ஹைதராபாத் பெண் ராகசுதா விஞ்சாமுரி, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை இந்தியப் பாரம்பரிய நடனத்தை ஆடி புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்திய பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனத்தில் சிறந்தவரான ராகசுதா, 12 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து சென்றவர்.
அவர் தற்போது சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக உள்ளார்.
ராகசுதா பெண்கள் மேம்பாடு, அகிம்சை, ஆயுர்வேதம், இசை சிகிச்சை உள்ளிட்ட ஏராளமான தலைப்புகளில் இந்திய பாரம்பரிய நடனத்தை ஆடியுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த உமா ராமராவ் என்பவரிடம் ராகசுதா நடனம் பயின்றுள்ளார்.
ராகசுதா கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் ஆசிய பெண் சாதனையாளர்கள் விருதுகளில் இறுதிப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.