இந்தியா

மனைவி, மகள், மகன்கள் நட்சத்திர பிரச்சாரகர்கள்: லாலு கட்சி அறிவிப்பு

செய்திப்பிரிவு

தேர்தல் ஆணையத்திடம் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் நட்சத்திர பிரச்சாரகர்கள் தொடர்பான பட்டியல் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. அதில், அவரின் மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி, மகன்கள் தேஜ் பிரதாப், தேஜஸ்வி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதில், தேஜ் பிரதாபை விட நன்கு பேசக்கூடிய தேஜஸ்வியை தனது அரசியல் வாரிசாக கடந்த ஆண்டு லாலு பிரசாத் அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது. மக்களவைத் தேர்தலில் பிகார் முழுவதும் தேஜஸ்வி பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுக்க கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிடவுள்ள மிசா பாரதி, தனது தொகுதி மட்டுமல்லாது பிற முக்கிய தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள வுள்ளார். சரண் தொகுதியிலிருந்து போட்டியிட வுள்ள ராப்ரி தேவியும் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

SCROLL FOR NEXT