இந்தியா

கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவர் சங்கரமூர்த்தி தமிழக ஆளுநராகிறார்?

இரா.வினோத்

தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தின் புதிய ஆளுநர் பொறுப்புக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் உள்ளிட்டோரின் பெயர்களை பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநில பாஜக மூத்த‌ தலைவரும், சட்டமேலவை உறுப்பினருமான டி.ஹெச்.சங்கரமூர்த்தியை ஆளுநராக நியமிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து பாஜக தலைவர் அமித்ஷா டி.ஹெச்.சங்கரமூர்த்தியை டெல் லிக்கு அழைத்துப் பேசினார். அப்போது ஆளுநர் பொறுப்பு தர தலைமை முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே பெங்களூரு திரும்பிய டி.ஹெச்.சங்கரமூர்த்தி தனது சட்டமேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக மாநில பாஜக தலைவர் எடியூரப்பாவிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இது தொடர்பாக டி.ஹெச்.சங்கரமூர்த்தி, ‘‘எனக்கு ஆளுநர் பதவி வழங்க இருப்பதாக அமித் ஷா தெரிவித்தார். ஆனால் எந்த மாநிலம் என்பதை தெரிவிக்கவில்லை'' என்றார்.

தமிழக ஆளுநராக சங்கரமூர்த்தி நியமிக்கப்படுவதற்கான அறி விப்பை பாஜக தலைமை விரைவில் வெளியிடும் என உறுதியான தகவல்கள் வெளி யாகியுள்ளன.

டி.ஹெச்.சங்கரமூர்த்தி (76) கர்நாடகாவில் பாஜகவை வளர்க்கப் பாடுபட்டவர். 1966-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்த இவர், தற்போது வரை நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். நெருக்கடி காலத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தியதால் 19 மாதங்கள் பெலகாவி சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பிறகு 1988-ம் ஆண்டு கர்நாடக சட்ட மேலவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 25 ஆண்டு களாக சட்டமேலவை உறுப்பின ராக உள்ள இவர், சட்டமேலவையி ல் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். எடியூரப்பா தலை மையிலான பாஜக‌ ஆட்சியில் அமைச்சராகவும் பணியாற்றி யுள்ளார்.

SCROLL FOR NEXT