இந்தியா

எல்லை பாதுகாப்பில் நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் தகவல்

பிடிஐ

குஜராத் மாநிலம் பனாஸ்காந்தா மாவட்டத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள நடாபேட் பகுதியில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின் எல்லை பாதுகாப்பு விஷயத்தில் வீரர்களுக்கு உதவி யாக, நவீன தொழில்நுட்பங் களை அறிமுகப்படுத்த திட்டமிடப் பட்டது.

அதன்படி, ரேடார், லேசர், சிசிடிவி, சென்சார் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை எல்லைப் பாதுகாப்புப் பணிகளில் பெரிய அளவில் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை மத்திய அரசு தற்போது அறிமுகப்படுத்துகிறது. ‘ஒருங்கிணைக்கப்பட்ட விரிவான எல்லை மேலாண்மை அமைப்பு’ எனப்படும் இந்த திட்டத்தின் உதவி யுடன், எல்லைகளை வீரர்கள் இன்னும் திறம்பட பாதுகாக்க முடியும். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

SCROLL FOR NEXT