இந்தியா

பொட்டாசியம் புரோமேட் பயன்பாட்டுக்கு மத்திய அரசு தடை

பிடிஐ

ரொட்டி வகைகளில் ரசாயனப் பொருளான பொட்டாசியம் புரோமேட் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பது உறுதி செய்யப்பட்டதன் காரணமாக மத்திய அரசு அதன் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது.

உணவுப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் (எப்எஸ்எஸ்ஏஐ) சிஇஓ பவன் குமார் அகர்வால் கூறும்போது, "ரொட்டி வகைகளில் ரசாயனப் பொருளான பொட்டாசியம் புரோமேட் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது என்பதை சிஎஸ்இ உறுதி செய்துள்ளது.

எனவே, உணவு பதப்படுத்துதலுக்காக பொட்டாசியம் புரோமேட் பயன்பாட்டுக்கு முற்றிலுமான தடை விதிக்கப்படுகிறது. பொட்டாசியம் ஐயோடைட் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்" என்றார்.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (சிஎஸ்இ) மாசு கண்காணிப்பு ஆய்வகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், பேக்கிங் செய்யப்பட்ட ரொட்டி, பாவ் மற்றும் பன்கள், பர்கர் ரொட்டி மற்றும் பிஸா ரொட்டிகள் உட்பட 38 வகையான உணவுப் பொருட்களில் 84 சதவீத மாதிரிகளில் பொட்டாசியம் புரோமேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட் ஆகிய ரசாயனப் பொருட்கள் இருந்தது தெரியவந்ததாக தெரிவித்தது.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் தற்போது உணவுப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு பொட்டாசியம் புரோமேட் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது.

SCROLL FOR NEXT