சமூக வலைதளமான ட்விட்டரில் பட்ஜெட் தொடர்பாக 7.2 லட்சம் ‘ட்வீட்கள் பதிவாகி பெரும் சாதனை படைத்துள்ளது.
மக்களவையில் 2017-18 நிதியாண்டுக்கான பொதுபட்ஜெட்டை வியாழக்கிழமை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். அதற்கு முந்தைய நாளில் இருந்தே சமூக வலைதளமான ட்விட்டரில் பட்ஜெட் தொடர்பான காய்ச்சல் சூடுபிடிக்கத் தொடங்கியது. ஜனவரி 30 முதல் கடந்த 2-ம் தேதி வரை பட்ஜெட் என்ற பெயரில் ஹேஷ்டேக்கிட்டு மொத்தம் 7.2 லட்சம் ‘ட்வீட்’கள் குவிந்து பெரும் சாதனை படைத்துள்ளது.
இது தவிர நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேரலையாக நிகழ்த்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் ட்விட்டரில் இடம்பெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
மேலும் மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது ட்விட்டர் அது குறித்த பதிவுகளை நேரலையாக பதிவிட்டது. மேலும் கொள்கை வகுப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், பொருளாதார நிபுணர்கள், பொதுமக்கள் ஆகியோரிடமும் கலந்துரையாடி கருத்துகளை வெளியிட்டது. பிரதமர் நரேந்திர மோடியும் பட்ஜெட் குறித்து ட்வீட் செய்திருந்தார்.