இந்தியா

பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது: பெங்களூரு போலீஸார் நடவடிக்கை

செய்திப்பிரிவு

‘லத்திகா’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் எஸ்.சீனிவாசன் (எ) பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் சென்னையில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிக் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார்.

அந்த வகையில், கடந்த 2013-ம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கு ரூ.1,000 கோடி கடன் பெற்று தருவதாகக் கூறி, ரூ.10 கோடி மோசடி செய்ததாக பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார் எழுந்தது. இதன் அடிப்படியில் கடந்த மார்ச் மாதம் டெல்லி போலீஸார் சீனிவாசனை கைது செய்தனர்.

அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த சீனிவாசன் மீது பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மசூர் அலாம் மற்றும் அவரது சகோதரர் சஜ்ஜாத் வஹாப் பெங்களூரு போலீஸாரிடம் பண மோசடி புகார் ஒன்றை அளித்தனர். அதில், “ரூ.30 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி அதற்கு கமிஷன் தொகையாக ரூ.1 கோடியை சீனிவாசன் முன்னதாகவே வாங் கினார். ஆனால் சீனிவாசன் இது வரை கடன் பெற்றுத் தரவில்லை, கமிஷனாக பெற்ற ரூ.1 கோடியை யும் திருப்பித் தரவில்லை'' என குறிப்பிட்டு இருந்தனர்.

இதையடுத்து சென்னை சென்ற பெங்களூரு போலீஸார் நேற்று சீனிவாசனை கைது செய்து, பெங்களூரு அழைத்து வந்தனர்.

SCROLL FOR NEXT