இந்தியா

காவிரியால் தொடரும் வன்முறையை தடுக்க கோரிய அவசர மனு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

செய்திப்பிரிவு

தமிழகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவக்குமார் என்பவர் தாக்கல் செய்த அந்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்குமாறு உத்தரவிட்டது. இதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், பெங்களூருவில் பெரும் வன் முறை வெடித்துள்ளது. இதனால் இரு மாநிலங்களிடையே போக்கு வரத்து முற்றிலும் ஸ்தம்பித் துள்ளது.

கர்நாடகாவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின் றனர். அவர்களது சொத்துக்களும் சேதப்படுத்தப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதி மன்றம் தலையிட்டு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டும் பணிகளில் ஈடுபடு மாறு இரு மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், ஏ.எம்.கன்வில்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அதிஷ் அகர்வாலா, ‘‘காவிரியால் இரு மாநிலங்களிலும் போராட்டம் தீவிரமடைந்திருப்பதால், அவசர வழக்காக கருதி இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும்’’ என வாதாடினார்.

அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ‘‘சிவக் குமாரின் பொதுநல மனு வியாழக்கிழமை விசாரிக்கப் படும்’’ என உத்தரவிட்டனர்.

காவிரி வழக்கில் கர்நாட காவுக்கு கண்டனங்களை தெரிவித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, யூ.யூ.லலித் அடங்கிய அமர்வு முன் இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT