இந்தியா

பாகிஸ்தான் அத்துமீறி 2 முறை தாக்குதல்

செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று 2 முறை தாக்குதல் நடத்தியது.

இந்த ஆண்டில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.

இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “சர்வதேச எல்லையை ஒட்டிய சம்பா பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது, காலை 8.45 மணி அளவில் சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. பின்னர் 9.35 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதற்கு நமது படையினர் அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்தனர்” என்றார்.

SCROLL FOR NEXT