இந்தியா

உஸ்மானியா பல்கலை நூற்றாண்டு விழா: பல்துறை ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் - மாணவர்களுக்கு பிரணாப் அறிவுரை

செய்திப்பிரிவு

ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நேற்று கோலா கலமாக தொடங்கியது. இவ் விழாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

உஸ்மானியா பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதை கவுரமாக கருது கிறேன். இது நாட்டில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இதே நாளில் தான் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு முற்போக்கு சிந்தனையுடன் இந்த பல்கலைக்கழகம் தொடங்கப் பட்டது. இந்த இடைப்பட்ட நூறு ஆண்டுகளில் உலகில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆந்திர மாநிலத்தில் கூட மாற்றம் நிகழ்ந்து விட்டது. இந்த பல்கலைக் கழகத்தை நிறுவிய மீர் அலி உஸ்மான் கானின் கனவை மாணவர்கள் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளனர்.

தொழிற்கல்வியில் இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்பே முன்னேறி விட்டது. இப்போதும் அனைத்து நாடுகளுக்கும் தொழிற் கல்வியில் இந்தியாதான் முன் னோடி. ஆனால் ஆராய்ச்சி துறை யில் பின்தங்கி உள்ளோம். எனவே பல்கலைக்கழகங்கள் ஆராய்ச் சிக்கு அதிக நேரம் செலவிட வேண் டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT