இந்தியா பாகிஸ்தான் மீனவர்கள் சந்தித்துப் பேச மத்திய அரசு ஏற் பாடு செய்யவேண்டும் என்று இந்தியா - பாகிஸ்தான் அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் ஜத்தீன் தேசாய், “தி இந்து”விடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
சர்வதேச கடல் எல்லையை யொட்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படை யால் தாக்கப்படுவதை தடுக்க, இரு நாடுகளின் மீனவர்களும் வரும் 20ம் தேதி சந்தித்துப் பேசுகின்ற னர். இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். இதுபோல் குஜராத் பாகிஸ்தான் மீனவர்கள் சந்தித் துப் பேசவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
1990-கள் வரை குஜராத் - பாகிஸ்தான் மீனவர்கள் இடையே எந்தப் பிரச்சினையும் எழவில்லை. அதன் பிறகு இரு நாடுகளிடையே வளர்ந்த விரோதம் காரணமாக பாகிஸ்தான் அரசு தனியாக சட்டம் இயற்றி குஜராத் மீனவர்களை கைது செய்வதுடன், படகுகளையும் கைப்பற்றுகிறது. “இந்திய மீனவர்கள் எங்கள் சகோதரர்கள், அவர்கள் எங்கள் பகுதியில் வந்து மீன் பிடிப்பதில் ஆட்சேபனை இல்லை” என்று பாகிஸ்தான் மீன வர்கள் கூறுகின்றனர். ஆனால் பாகிஸ்தான் அரசுதான் தற்போ தைய பிரச்சினைக்கு காரணம்.
தெற்காசியாவில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் மாலத்தீவு மீனவர் களுக்கு இடையிலும் ஒரு பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும். இந்த நாடுகளுக்கு இடையில் அடிக் கடி நிலவும் மீனவர் பிரச்சினைகளை தீர்க்க, 5 நாடுகளின் மீனவர்கள் கொண்ட தெற்காசிய மீனவர் பேரவை அமைக்கப்பட வேண்டும்.
எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பவர்களை கைது செய்யாமல் திருப்பி அனுப்புவது ஒன்றுதான் இப்பிரச்சினைக்கு தீர்வாக இருக் கும். இம்முடிவை இரு நாடுகளின் அரசுகள்தான் எடுக்க முடியும். இதற்கு மீனவர்கள் பேச்சு வார்த்தை தொடக்கமாக இருக்கும் என்றார் ஜத்தீன் தேசாய்.
இவர் மகாராஷ்டிர மாநிலத்தில் பிரபல பத்திரிகையாளராக உள் ளார். கடந்த மாதம் 21 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் மீனவர்கள் பங்கேற்கும் ஒரு கூட்டத்திற்கு இவர் டெல்லியில் ஏற்பாடு செய் திருந்தார். இக்கூட்டத்துக்கு பாகிஸ் தான் மீனவர்கள் பேரவையின் நிறுவனர் கராமத் அலி மட்டும் வந்திருந்தார். விசா கிடைக்காததால் மற்றவர்கள் வரமுடியவில்லை.