இந்தியா

குஜராத்தை வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக பேசுவது தேர்தலில் எடுபடாது: ராகுல்

செய்திப்பிரிவு

பாஜக மாயை 2004 மற்றும் 2009 மக்களவைத் தேர்தலுக்கு பின் இல்லாமல் போனதுபோல், குஜராத் மாநிலம் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு என்ற நிலையும் இந்தத் தேர்தலுக்கு பிறகு இல்லாமல் போய்விடும் என்று ராகுல் காந்தி கூறினார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் பேசியபோது, "2004-ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் பாஜக என்ற மாயை நாட்டில் இல்லாமல் போனது. அதே போல் தற்போது வள்ர்ச்சி என்றால் அது குஜராத் என்று ஒரு கருத்து நாட்டில் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பிம்பம் வரும் மக்களவைத் தேர்தலுக்கும் பின் மறைந்துவிடும்.

2009-ம் ஆண்டு மக்களிடம் பாஜக-வினர் இந்தியா ஒளிர்கிறது என்று ஓட்டுக் கேட்டு பார்த்தார்கள், ஆனால் காங்கிரஸ் கட்சி மக்களிடம் ஊரக வேலை வாய்ப்பு திட்டம் பற்றி கூறியது. மக்கள் உடனே காங்கிரஸுக்கு ஆதரவு அளித்து வாக்களித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த முறை காங்கிரஸ் அரசு ஆட்சி அமைக்க, மக்கள் வாக்களித்தால் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படும்" என்றார் ராகுல்.

SCROLL FOR NEXT