இந்தியா

தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வலியுறுத்தல்

பிடிஐ

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகள் மீது அந்த நாடு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி வலியுறுத்தி உள்ளார்.

மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜான் கெர்ரி, டெல்லி ஐஐடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் தீவிரவாதம் குறித்து பேசியதாவது:

அல் காய்தா, லஷ்கர்-இ-தொய்பா, டாயிஷ், ஜெய்ஷ்-இ-முகமது, ஹக்கானி உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை ஒரு நாடு மட்டும் எதிர்த்துப் போரிட முடியாது. உலக நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும். இதுகுறித்து பரிசீலித்து வருகிறோம்.

குறிப்பாக பாகிஸ்தானின் மேற்குப் பகுதி தீவிரவாதிகளின் சரணாலயமாக விளங்குகிறது. எனவே, இந்த அமைப்புகளை அழிப்பது குறித்து அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபுடன் பலமுறை பேசி இருக்கிறேன்.

பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் ஹக்கானி மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய அமைப்புகளால் இந்தியா-பாகிஸ் தான் இடையிலான உறவு பாதிக்கப்படுவதுடன் ஆப்கானிஸ் தானில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற எங்களது முயற் சிக்கும் முட்டுக்கட்டையாக விளங்கு கிறது.

எனவே, இந்த தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் அந்த நாடு எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசல்

முன்னதாக, டெல்லியில் நேற்று காலையில் கனமழை பெய்த தால் சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. இதனால், ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரி சலில் கெர்ரியின் காரும் சிக்கிக் கொண்டதால், ஐஐடி நிகழ்ச்சிக்கு தாமதமாக சென்றார்.

இதுகுறித்து மாணவர்களிடம் அவர் கூறும்போது, “கனமழை பெய்த போதிலும் சரியான நேரத் துக்கு வந்த உங்களுக்கு விருது கொடுக்கலாம். நீங்கள் படகு அல்லது நீரிலும் நிலத்திலும் பய ணிக்கும் வாகனத்தில் வந்தீர்களா என எனக்கு தெரியாது. இதற்காக உங்களுக்கு வணக்கம்” என்றார். மழை காரணமாக 3 மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும் திட்டத்தை கெர்ரி கைவிட்டார்.

ஒரே குரலில் பேசுவோம்

இந்தியா, அமெரிக்கா இடையி லான 2-வது வர்த்தக பேச்சு வார்த்தை டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை யடுத்து நேற்று வெளியிடப்பட்ட கூட் டறிக்கையில் கூறியிருப்பதாவது:

தீவிரவாதம் எந்த வடிவில் உருவெடுத்தாலும் அதை வன்மை யாகக் கண்டிக்கிறோம். அதேநேரம் தீவிரவாதிகளின் புகலிடத்தை அழித்து ஒழிப்பதில் உறுதியாக உள் ளோம். மும்பை தாக்குல் (2008) மற்றும் பதான்கோட் (2016) தீவிரவாத தாக்குதலில் தொடர் புடையவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்ச்சைக்குரிய தென்சீன கடல் பகுதியில் நிலவும் பிரச்சினையை சம்பந்தப்பட்ட நாடுகள் பேசி தீர்த் துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் சர்வதேச சட்டங்க ளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT