ஹரியாணா மாநிலம் குர்கானில் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, அவரது குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குர்கானில் கடந்த மே 29-ம் தேதி இரவு பெண் ஒருவர் தனது 9 மாத பெண் குழந்தையுடன் ஆட்டோவில் பயணம் செய்தார். இந்நிலையில் ஆட்டோவில் ஏற்கெனவே இருந்த இருவர் மற்றும் ஆட்டோ டிரைவரால் அப்பெண் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டார். மேலும் ஆட்டோவில் இருந்து குழந்தை வீசப்பட்டதில் தலையில் காயம் அடைந்த குழந்தை இறந்தது.
இது தொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் நேற்று முன்தினம் குற்றவாளிகளின் படங்களை வெளியிட்டனர். இந்நிலையில் குர்கான் காவல்துறை ஆணையர் சந்தீப் கிர்வார் நேற்று கூறும்போது, “குற்றவாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற இருவரையும் விரைவில் கைது செய்வோம்” என்றார்.