இந்தியா

பாலியல் புகார்: கவுரவ பேராசிரியர் பதவியிலிருந்து நீதிபதி ஏ.கே.கங்குலி விலகல்

செய்திப்பிரிவு

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவருமான ஏ.கே. கங்குலி, தேசிய நீதிமன்ற நடவடிக்கை அறிவியல் பல்கலைக்கழகத்தின் கவுரவ பேராசிரியர் பொறுப்பிலிருந்து வெள்ளிக்கிழமை விலகினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர், நான் கவுரவ பேராசிரியர் பொறுப்பில் தொடர் வது குறித்து சில கருத்துகளைத் தெரிவித்தனர். இதையடுத்து என் ராஜிநாமாக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளேன்.

மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவியிலிருந்து என்னைப் பதவி நீக்கம் செய்வதற்கான, குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது குறித்து செய்தித் தாள்கள் மூலம் அறிந்து கொண்டேன். இதில் நான் என்ன கருத்து கூற முடியும்? நிகழ்ச்சிகள் நடைபெறுவது என் கையில் இல்லை. நான் எதையும் முடிவு செய்ய முடியாது. ஆகவே, அமைதியாக இருக்க முடிவு செய்திருக்கிறேன் என்றார்.

உச்ச நீதிமன்றத்தில் மனு

இதனிடையே, கங்குலியை மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கச் செய்வதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றுக்குத் தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் பத்மா நாரயண் சிங் இதற்கான மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில், கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் ஜெய்சிங் கையும் எதிர்தரப்பினராகச் சேர்த்துள்ளார்.

பாலியல் வல்லுறவுச் சட்டம்-2013ன் படி, சம்பவம் நடை பெற்ற 3 மாதங்களுக்குள் புகார் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதால், இச்சட்டத்தின் கீழ் கங்குலி மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT