பலவகை உயிரினங்களின் பெருக்கம்பற்றிய ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பை செய்தமைக் காக, 100 பெண் விஞ்ஞானிகள் பெயர்களை, தன் நூற்றாண்டு புத் தகத்தில் இந்திய விலங்கினங்கள் ஆய்வுத் துறை (இஸட்எஸ்ஐ) தொகுத்து வெளியிட்டுள்ளது.
கடந்த 1916-ம் ஆண்டு இஸட் எஸ்ஐ தொடங்கப்பட்டது. 2016-ம் ஆண்டில் இதன் நூற்றாண்டை முன்னிட்டு, இந்த அமைப்பின் செயல்பாடுகளை விளக்கும் வகையில் ‘தி குளோரியஸ் 100 வுமன்ஸ் சைன்டிபிக் கான்டிரி பூசன் இன் இஸட்எஸ்ஐ’ என்ற ஆவணப் புத்தகம் வெளியிடப்படு கிறது. இதில், இத்துறையில் 100 பெண் விஞ்ஞானிகள் செய்த பங்களிப்பு விவரம் தொகுக்கப் பட்டுள்ளது.
இந்த தொகுப்பின் இணை யாசிரியரும், இஸட்எஸ்ஐ துணை இயக்குநருமான தரிதி பானர்ஜி கூறும்போது, “இஸட்எஸ்ஐயால் கடந்த 100 ஆண்டுகளில் கண்டறியப்பட்ட புதிய உயிரினங்களில் 10 சதவீதம் இந்த பெண் விஞ்ஞானிக ளால் கண்டறியப்பட்டவை. கடந்த 1949-ல் மீரா மனுஷ்கானி இஸட் எஸ்ஐ-யில் சேர்ந்த முதல் பெண் ஆவார்” என்றார்.