இந்தியா

ஆயுதத் தரகர் சஞ்சய் பண்டாரியுடன் அமைச்சரின் உதவியாளருக்கு தொடர்பு: சரிபார்க்கப்படும் என மத்திய அமைச்சர் தகவல்

பிடிஐ

தனது உதவியாளர் அப்பா ராவுக்கு ஆயுதத் தரகர் சஞ்சய் பண்டாரியுடன் தொடர்பு இருப்ப தாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சரிபார்க்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்துள்ளார்.

சஞ்சய் பண்டாரிக்கு சொந்த மான இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த மாதம் சோதனை நடத்தினர். இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, பினாமி பெயரில் லண்டனில் வீடு வாங்கியதற்கான ஆதாரம் கிடைத்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் பண்டாரியுடன் ராஜுவின் உதவியாளரான அப்பா ராவ் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் ராஜு கூறும்போது, “பண்டாரியுடன் எனது உதவியாளர் அப்பா ராவ் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு சரிபார்க்கப்படும். அப்பா ராவை பணிக்கு அமர்த்தியது நான். எனவே, அவர் ஏதாவது தவறு செய்திருந்தால் அதில் எனக்கும் பொறுப்பு உள்ளது. ஊழல் இல்லாத நிர்வாகத்தை நாங்கள் வழங்கி வருகிறோம். எனது உதவியாளர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் அதை என்னிடம் கூறுங்கள். அதை ஒருபோதும் நான் சகித்துக் கொள்ள மாட்டேன்” என்றார்.

பண்டாரி 355 முறை அப்பா ராவை தொடர்புகொண்டு பேசிய தாக விசாரணை அமைப்புகள் தெரி வித்துள்ளன. ஆனால் இதை மறுத் துள்ள ராவ், தனிப்பட்ட முறையில் பண்டாரியுடன் பேசவில்லை என்றும் பணி நிமித்தமாக மட்டுமே பேசினேன் என்றும் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து ராவ் கூறும்போது, “355 முறை நான் பண்டாரியுடன் பேசியதாகக் கூறுவதில் உண்மை இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டில் பண்டாரி சுமார் 4 முறை அமைச்சரை சந்தித்துள்ளார். அதன் அடிப்படை யில்தான் அவருடன் பேசி உள்ளேன். தனிப்பட்ட முறையில் அவருக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை” என்றார்.

SCROLL FOR NEXT