இந்தியா

நக்சல் பாதிப்பில் இருந்து மீண்ட முதல் மாநிலமாக ஜார்க்கண்ட் மாறும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் உறுதி

பிடிஐ

இந்தியாவிலிருந்து நக்சல் இயக்கம் முற்றிலும் வேரறுக்கப்படும். ஜார்க்கண்ட் மாநிலம், நக்சல் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்ட முதல் மாநிலமாக மாறும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், ராணுவ நிர்வாக கட்டிடம், மைதானம் உள்ளிட்ட புதிய கட்டமைப்புகளைத் திறந்து வைத்த ராஜ்நாத் சிங் பேசியதாவது:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ பிரச்சினைக்கு தீர்வு கண்டறியப்படும். நக்சல் இயக் கத்தை வேரறுக்கும் ஜார்க்கண்ட் ஜாக்குவார் படையின் திறன் திருப்தியளிக்கிறது.

ராணுவ வீரர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்துக்காக மட்டுமின்றி தேசத் துக்காகவும் ரத்தம் சிந்துகின்றனர். தீவிரவாதிகளால் கொல்லப்படும் ஒவ்வொரு சம்பவமும் வேதனையளிக்கிறது.

உள்கட்டமைப்பு போதுமான தாக இருக்கிறது. எனவே, வீரர் களுக்கு கடினமான சூழல்கள் இல்லை. சிறப்பு உள்கட்டமைப்பு திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது வருத்தமளிக்கிறது. இதுதொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பிரதமர் மோடி ஆகியோரிடம் பேசினேன். அவர்கள் மீண்டும் அமல்படுத்துவதாக உறுதி யளித்துள்ளனர்.

மாவோயிஸ்ட்களின் எண் ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அவர்களின் மிகப்பெரிய குழுவுக்கு செயல்திறன் இல்லை. கிளைக் குழு மீது கவனம் செலுத்த வேண்டும்.

ஏழைகளுக்கு நன்மை செய்ய அரசு முயலும்போது, கிளர்ச்சியா ளர்கள் இடையூறு செய்கின்றனர். மாவோயிஸ்ட்கள் மக்களுக்கும், ஏழைகளுக்கும் விரோதிகள். ஏழை களுக்கான மத்திய மாநில அரசு களின் திட்டங்களைத் தடுத்துவிட்டு, தாங்கள்தான் ஏழைப்பங்காளன் என மாவோயிஸ்டுகள் சொல்லிக் கொள்கின்றனர்.

ஜார்க்கண்ட் காவல் துறையின் நக்ஸல்களுக்கு எதிரான செயல் பாடுகள் பாராட்டத்தக்கவை.இவ் வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT