இந்தியா

ஆதரவற்ற பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை: தெலங்கானா முதல்வர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஆதரவில்லா ஏழை பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று அறிவித்தார்.

தெலங்கானா மாநில குளிர்கால பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் பேசியதாவது:

மாநிலத்தில் ஆதரவற்று வசித்து வரும் ஏழை பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இவர் களுக்கு வரும் மார்ச் மாதம் முதல் ‘ஜீவன் ஜோதி’ எனும் பெயரில் உதவித்தொகை வழங்கப்படும். ஏழ்மை நிலையை ஆணை விட பெண் தாங்கி கொள்வதில் அதிகம் சிரமம் உள்ளதால்தான் இந்த திட்டம் அமல்படுத்தப் படுகிறது என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT