எனது தந்தையை கொன்றது பாகிஸ்தான் அல்ல; போர் தான் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி மாணவி குர்மேஹர் கவுர், நீண்ட நாட் களுக்குப் பின் தனது மவுனத்தைக் கலைத்துள்ளார்.
டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியின் மாணவி யான குர்மேஹர் கவுர், டெல்லி பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி மாணவர்கள் நடத்திய தாக்கு தலை கண்டித்தார். அத்துடன் ‘‘எனது தந்தையை கொன்றது பாகிஸ்தான் அல்ல; போர் தான்’’ என பதாகையில் எழுதி அதை இணையதளத்தில் பதி விட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு பாலியல் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
ஒரு கட்டத்தில் கருத்து வெளி யிடுவதை நிறுத்தி கொண்ட குர்மேஹர் கவுர், நீண்ட நாட் களுக்குப் பின் தற்போது மவுனத்தைக் கலைத்துள்ளார். தனது வலைப்பூவில் ‘‘எனது தந்தை நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர். நான் அவரது மகள். ஆனால் நான் உங்களது தியாகியின் மகள் அல்ல’’ என பதிவிட்டு முந்தைய கருத்தில் உறுதியுடன் இருப்பதை விளக்கியுள்ளார்.
மேலும் அதில், ‘‘கையில் பதாகை ஏந்தி, புருவத்தை உயர்த்தியபடி தொலைக்காட்சி திரைகளில் காண்பிக்கப்பட்ட அந்த பெண் என்னைப் போலவே தோற்றம் கொண்டவர்’’ என குறிப்பிட்டுள்ளார்.