ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் அனைவரும் பெரிய படிப்பு படித்தவர்கள் என, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறிவரும் நிலையில், அக்கட்சி எம்எல்ஏக்களில், 26 பேர் கல்லூரிக்கே செல்லவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மற்ற கட்சியினரைப் போல படிப் பறிவற்றவர்கள் இல்லை என்றும், எம்பிஏ முதல் பொறியியல் பட்டம் வரை பல்வேறு துறைகளில் உயர்ந்த படிப்புகளை படித்தவர் கள் எனவும், அக்கட்சித் தலை வரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கூறிவந் துள்ளார்.
ஆனால், தேர்தல் ஆணையத் திடம் அளிக்கப்பட்ட வேட்பு மனு ஆவணங்களை ஆராயும் போது, அக்கட்சியைச் சேர்ந்த 23 எம்எல்ஏக்கள் பள்ளிப் படிப்பை தாண்டவில்லை என்பது தெரிய வந்துள்ளது. டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 3 பேர், பட்டயப் படிப் போடு நிறுத்திக் கொண்டுள்ளனர். இவர்கள் 26 பேரும் கல்லூரிப் படிப்பை எட்டவில்லை.
நரேஷ் பால்யன், ஹசாரி லால், ராஜு தின்கான் மற்றும் அவதார் சிங் ஆகிய 4 எம்எல்ஏக்கள், 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள னர். டெல்லி சீலம்பூர் எம்எல்ஏ வான முகமது இஷாரக், தொடக்கக் கல்வியோடு தனது பள்ளிப் படிப்பை நிறுத்திக்கொண்டுள் ளார். 6 எம்எல்ஏக்கள் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளனர். 12 எம்எல்ஏக் கள் பிளஸ் 2 முடித்துள்ளனர்.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களில், 16 பேர் இளநிலைப் பட்டப் படிப்பையும், 20 பேர் முதுநிலை பட்டப்படிப்பையும் முடித்துள்ள னர். கேஜ்ரிவால் உள்ளிட்ட 7 பேர் தொழிற்படிப்பு முடித்துள்ளனர்.