இந்தியா

தேர்தலில் போட்டியிட பதவியை ராஜிநாமா செய்தார் மும்பை கமிஷனர்

செய்திப்பிரிவு

மும்பை காவல் துறை ஆணையர் சத்யபால் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

வியாழக்கிழமை அவர் ராஜிநாமா கடிதத்தை மகாராஷ்டிரா மாநிலம் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலிடம் வழங்கியுள்ளார்.

உள்துறை அமைச்சகம், சத்யபால் சிங்கின் ராஜிநாமா கடிதத்தை மாநில முதல்வருக்கு அனுப்பியுள்ளது. அவரது பதவிகாலம் அடுத்த ஆண்டு முடியும் நிலையில் தற்போது ராஜிநாமா செய்துள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே சத்யபால் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக தெரிகிறது.

சத்யபால் சிங் எந்த கட்சி சார்பில் போட்டியிடுவார் என்பது உறுதியாகாவிட்டாலும், அவருக்கு பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளில் இருந்து அழைப்பு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT