இந்தியா

பாஜக முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் காலமானார்

செய்திப்பிரிவு

பாஜக முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் ஹைதராபாத்தில் இன்று (சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 75. கடந்த 2000-வது ஆண்டு முதல் 2001 வரை பாஜக தலைவராக பங்காரு லட்சுமணன் பதவி வகித்தார்.

இந்திய ரயில்வே அமைச்சராகவும் பங்காரு லட்சுமணன் ஓராண்டு காலம் பதவி வகித்தார்.

தெஹல்கா இதழ் அம்பலப்படுத்திய ஆயுத பேர ஊழல் வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்ட பங்காரு லட்சுமணனுக்கு கடந்த 2012.ல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இருப்பினும் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு பங்காரு லட்சுமணன் பாஜக தேசிய செயற்குழுவில் இருந்து ராஜினாமா செய்தார்.

SCROLL FOR NEXT