குஜராத்தைச் சேர்ந்த 100 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது.
பாகிஸ்தான் கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக கடற்படையினர் குற்றம்சாட்டினர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் கராச்சியில் உள்ள டாக்யார்ட் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள்.
இதற்கு முன்பாகவும் 225 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்து பிறகு விடுவித்தனர்.