இந்தியா

பி.எப். திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000

செய்திப்பிரிவு

வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்.) இணைந்துள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1000 ஓய்வூதியம் திட்டத்துக்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.1,217 கோடி கூடுதல் மானியம் வழங்கும்.

மேலும் குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்துக்கான ஊதிய வரம்பை ரூ.6,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தவும் நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

பி.எப். திட்டத்தில் தற்போது 44 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் 27 லட்சம் பேர் ரூ.1000-க்கும் குறைவான ஓய்வூதியம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT