இந்தியா

மத்திய அரசின் செயல்பாடு ஏமாற்றம் தருகிறது: நரேந்திர மோடி

செய்திப்பிரிவு

மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளி களை நீதியின் முன் நிறுத்தாத மத்திய அரசின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது என்று குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டர் இணையதளத்தில் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:

“மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான வர்களை நீதியின் முன் நிறுத்துவதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது. மத்திய அரசின் இந்தச் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது.

இந்தியா எதிர்கொண்டுள்ள பாது காப்பு அச்சுறுத்தலை நினைவுபடுத்தும் சம்பவமாக மும்பை தாக்குதல் உள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் தியாகம் வீண் போகாது என்று அவர்களின் குடும்பத்தினருக்கு உறுதியளிக்கிறேன். வலிமையான, பாது காப்பான இந்தியாவை கட்டமைப்ப தற்கான நேரம் இது.

மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தங்களின் கடமையை பெரிதாக போற்றி, உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்” என்றார் நரேந்திர மோடி.

SCROLL FOR NEXT