இந்தியா

உ.பி.யில் 6-ம் கட்ட தேர்தலுக்கு மனு

பிடிஐ

உ.பி.யில் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 6-ம் கட்ட தேர்தல் 7 மாவட்டங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு மார்ச் 4-ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு தொடங் கியது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 14 கடைசி தேதி யாகும். பிப்ரவரி 16-ம் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறு கிறது. மனுக்களை வாபஸ் பெற பிப்ரவரி 18 கடைசி நாளாகும்.

6-ம் கட்ட தேர்தலில் சுமார் 1.72 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 94.60 லட்சம் பேர் ஆண்கள். 77.84 லட்சம் பேர் பெண்கள். இவர்கள் தங்கள் வாக்கினைப் பதிவுசெய்ய 17,926 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

6-ம் கட்ட தேர்தலைச் சந்திக்கும் 49 தொகுதிகளில் கடந்த தேர்த லில் 27-ல் சமாஜ்வாதி கட்சி, 9-ல் பகுஜன் சமாஜ், 7-ல் பாஜக, 4-ல் காங்கிரஸ், 2-ல் மற்றவர்கள் வெற்றி பெற்றனர்.

SCROLL FOR NEXT