ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நாளை மறுநாள் கடையடைப்பு போராட் டத்துக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
ஹைதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:
ஒருங்கிணைந்த ஆந்திராவை பிரித்தபோது, பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங் களவையில் அறிவித்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு 10 ஆண்டுகள் வரை சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த மக்க ளவை தேர்தலின் போது வெங் கய்ய நாயுடு, அருண் ஜேட்லி ஆகியோரும் உறுதி அளித்தனர்.
ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற பாஜக மறந்துவிட்டது. அதன் தோழமைக் கட்சியான தெலுங்கு தேசமும், சிறப்பு அந்தஸ்தை கேட்டுப் பெற தவறிவிட்டது.
எனவே மத்திய, மாநில அரசின் இந்த போக்கை கண்டித்தும், உடனடியாக சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் வரும் 2-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவிக்கவுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.