இந்தியா

அண்ணா ஹசாரே எனது குரு: அரவிந்த் கெஜ்ரிவால்

செய்திப்பிரிவு

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தனது குரு என்றும், பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அவரை நிச்சயம் அழைப்பேன் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் வரும் சனிக்கிழமை டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், அண்ணா ஹசாரே கலந்து கொள்வாரா மாட்டாரா என்று பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியான நிலையில், அவற்றிற்கு முற்றுப் புள்லி வைக்கும் வகையில் பேசியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

அவர் டெல்லியில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசுகையில்: அண்ணா ஹசாரே எனது குரு. பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு அழைப்பு விடுப்பேன் என்றார்.

சில தினங்களுக்கு முன்னர், அண்ணா ஹசாரேவிடம், கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வீர்களா என நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தனக்கு அழைப்பு வரவில்லை என்றும் மேலும் உடல் நலன் சரியில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT