தெலங்கானா மாநில அரசு வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு 2 படுக்கை அறை வீடுகள் கட்டித் தர உள்ளது. இதற்காக நேற்று டெண்டர் கோரப்பட்டது. இந்த திட்டத்துக்கு தெலங்கானாவில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
தெலங்கானாவில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மானிய விலையில் 2 படுக்கை அறை கொண்ட வீடுகள் கட்டித் தரப்படும் என தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தேர்தலின்போது வாக்குறுதி அளித்தது.
அதன்பேரில் முதல் கட்டமாக ஹைதராபாத் மாநகராட்சி பகுதியில் 11 இடங்களில் ரூ. 391.38 கோடி செலவில் 4,538 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் நேற்று தெலங்கானா அரசு டெண்டர் கோரி உள்ளது. இத்திட்டத்துக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.