நாடாளுமன்ற நிலைக்குழு சேர்மன் பொறுப்பிலிருந்து ப.சிதம்பரம் நீக்கப்பட வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
சிபிஐ விசாரணைக்கு உட்பட்ட அவர் இந்த பொறுப்பில் நீடிப்பது கூடாது என்று கூறியுள்ளார் அவர்.
எல்லைப் பாதுகாப்பு பற்றிய நிலைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்குமறு மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் சிதம்பரத்தை அழைத்த போது சுவாமி இந்த விவகாரத்தை எழுப்பினார்.
ஆனால் ப.சிதம்பரம் அவையில் இல்லாததால் அறிக்கையை நிலைக்குழுவின் மற்றொரு உறுப்பினர் மஜீத் மெமான் சமர்ப்பித்தார்.
சிபிஐ விசாரணைக்கு உட்பட்ட ஒருவர் நிலைக்குழு சேர்மனாக தொடர்வது நியாயமாகாது என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தை சிபிஐ விசாரித்ததை சுப்பிரமணியன் சுவாமி காங்கிரஸார் எதிர்ப்புகளுக்கிடையே எழுப்பியது குறிப்பிடத்தக்கது.