இந்தியா

பஸ் டேங்கர் மோதல்: 8 பேர் பலி

செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் குரேகாவ்ன் கிராமம் அருகே தனியார் பஸ்ஸும் எண்ணெய் டேங்கர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்; 14 பேர் காயமுற்றனர்.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி சுதாகர் யெனாரே கூறியதாவது:

புனேவிலிருந்து ஆமதாபாத் சென்று கொண்டிருந்த தனியார் பஸ், ஆமதாபாத்- மும்பை நெடுஞ்சாலையில் தானே அருகே புதன்கிழமை காலை டேங்கர் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்து ஓட்டுநர் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் டேங்கர் வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

விபத்து ஏற்பட்டதில், பஸ் தீயில் முற்றிலுமாக எரிந்து உருக்குலைந்தது. பஸ்ஸில் 21 பயணிகள் இருந்துள் ளனர். 8 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப் படுகிறது.

பஸ்ஸுக்குப் பின்னால் வேகமாக வந்த காரும் பஸ்ஸின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் வந்தவர்களின் நிலை குறித்து முழுமையான தகவல் கிடைக்கவில்லை. இவ்விபத்து காரணமாக மும்பை ஆமதாபாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

SCROLL FOR NEXT