ஜன்லோக்பால் மசோதா விவகாரத்தில் எத்தகைய எல்லைக்கும் செல்லத் தயார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி அரசு கொண்டுவர உள்ள ஜன்லோக்பால் மசோதா வுக்கு, ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பிடிஐ தலைமை அலுவலகத்தில் அதன் செய்தி ஆசிரியர்களுடன் சனிக்கிழமை நடைபெற்ற உரையாடலின்போது கேஜ்ரிவால் கூறியதாவது:
லோக்பால் மசோதா நிறைவேறி னால் தங்கள் கட்சியைச் சேர்ந்த பலர் சிக்கிக் கொள்வார்கள் என காங்கிரஸ் உணர்ந்து கொண்டுள் ளது. இதுபோல் டெல்லியில் 7 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த பாஜக வுக்கும் சிக்கல் ஏற்படக்கூடும். குறிப்பாக லோக்பால் மசோதா நிறைவேறினால் காமன்வெல்த் முறைகேடு தொடர்பான வழக்கு களை லோக்பால் அமைப்பு விசாரிக்கும்.
எந்த ஒரு மசோதாவையும் நிறைவேற்றுவதற்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனு மதியைப் பெற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை (2002) திரும்பப் பெற வேண்டும் என அந்த அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளோம்.
இது ஒரு உத்தரவு மட்டுமே. இது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானதாகும். சட்டத்தை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள டெல்லி சட்டசபையை உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு எப்படி தடுக்க முடியும். எனவே, இந்த உத்தரவை கடைப்பிடிக்க முடியாது.
இது மிகவும் முக்கியமான பிரச்சினை. அரசியலமைப்பு சட் டத்தின் மீதுதான் நான் பதவிப் பிரமாணம் எடுத்துள்ளேன். உள் துறை அமைச்சக உத்தரவின் மீது அல்ல. சட்டத்தை நான் காப்பாற்றுவேன். முதல்வராக பதவியேற்றதும் இந்த உத்தரவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பின்னர் வர லாற்றை ஆராய்ந்ததில், டெல்லி அரசு இதற்கு முன்பு இயற்றி உள்ள 13 சட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதி பெறவில்லை என தெரியவந்தது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமை யிலான ஆட்சியின்போது நடை பெற்ற காமன்வெல்த் முறைகேடு கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். எனவேதான் ஆம் ஆத்மி அரசு மீதான காங் கிரஸ் கட்சியின் கோபம் அதிகரித்துள்ளது.
இதுவிஷயத்தில் பதவி விலகத் தயாரா என கேட்கிறீர்கள். ஊழல் என்பது மிகவும் முக்கியமான பிரச்சினை. இதைத் தீர்ப்பதற்காக எத்தகைய எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன் என்றார்.
ஜன்லோக்பால் மசோதாவுக்கு டெல்லி அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. விரை வில் இந்த மசோதாவை நிறை வேற்றப் போவதாக கேஜ்ரிவால் கூறியுள்ளார். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலின்றி நிறைவேற்றக்கூடாது என மத்திய அரசு கூறி வருகிறது.
முதல்வர் முதல் 4-ம் பிரிவு ஊழியர்கள் வரை அனைத்து அரசு ஊழியர்களும் இந்த சட்டத்துக்கு உட்படுத்தப்படுவர். இதன்படி ஊழல் செய்பவர்களுக்கு அதிக பட்சம் ஆயுள் தண்டனை கிடைக்கும்.