உலகத் தரம் வாய்ந்த பயண அனுபவத்தை இந்திய பயணி கள் பெறும் வகையில் நவீன பொழுதுபோக்கு அம்சங்கள், வைபை வசதி, பார்வையற் றோருக்கான பிரெய்லி திரையுடன் தேஜஸ் ரயில்களுக்கான பெட்டி கள் தயாராகி வருகின்றன.
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி அந்த்யோதயா விரைவு ரயில் மற்றும் தீன தயாளு ரயில் பெட்டிகளுடன் இந்த ஆண்டு தேஜஸ் மற்றும் ஹம்சபர் சொகுசு ரயில்களும் அறிமுகமாக வுள்ளன.
இதில் அந்த்யோதயா விரைவு ரயில் முழுவதும் முன்பதிவு இல்லாத ரயிலாகவும், தீன தயாளு ரயில் பெட்டிகள் பொது பயணிகளுக்கென்றே மேம்படுத் தப்பட்ட வசதிகளுடனும் இயக்கப் படவுள்ளன.
தேஜஸ் ரயில் பெட்டிகள் தங்க நிறத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. சாமான்ய மனிதனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் தேஜஸ் ரயிலின் இருக்கைகள் நீல வானம் மற்றும் பூமியின் நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தேஜஸ், ஹம்சபர், அந்த்யோதயா மற்றும் தீன தயாளு ரயில் பெட்டிகள் எப்படி அமைய வேண்டும் என்பதை இறுதி செய்துள்ளோம். அதன்படி பெட்டிகளை தயாரிக்கும்படி குறிப்புகள் கொடுத்துள்ளோம்’’ என்றார்.
தேஜஸ் ரயில்களில் எக்ஸி கியூடிவ் வகுப்பு மற்றும் சேர் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக் கும். மேலும் பயணிகளின் பொழுதுபோக்கு அம்சங் களுக்காக ஒவ்வொரு இருக்கை யிலும் பொழுதுபோக்கு திரைகள் உட்பட 22 வகையான புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு குறிப்புகளை தெரிவிப்பதற்காக எல்இடி பதாகைகளும் பொருத் தப்பட்டுள்ளன.
ரயிலில் உள்ள பயோ கழிவறைகளில் இருப்பில் உள்ள தண்ணீர் அளவை தெரிந்து கொள்வதற்கான கருவி, தொடு திறன் கொண்ட தண்ணீர் குழாய்கள் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன.
இதுதவிர வைபை வசதி, பார்வையற்றோருக்கான ஒருங் கிணைந்த பிரெய்லி திரைகள், ரயில் சென்றடைந்த ரயில் நிலையத்தின் தகவலை அறிவிக்கும் டிஜிட்டல் பதாகைகள் மற்றும் எலெக்ட்ரானிக் முன்பதிவு பதாகைகள் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன.
தேஜஸ் புதிய வகையிலான சொகுசு ரயில் என்பதால் தேனீர், காபி உள்ளிட்ட பானங்களுக் கான தானியங்கி இயந்திரங் கள் அதில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பத்திரிகைகள், நொறுக்கு தீனிகள் ஆகியவையும் பயணி களின் வசதிக்காக வைக்கப்பட் டிருப்பதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
தேஜஸில் உள்ள அனைத்து வசதிகளும் ஹம்சபர் ரயில் களிலும் பொருத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள், புகை பிடிப்பதை கண்டறியும் கருவி என நவீன தொழில்நுட்பங்களை கொண்ட ரயில்களாக தேஜஸும், ஹம்சபரும் இருக்கும் என்று ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.