இந்தியா

உத்தராகண்டில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி

செய்திப்பிரிவு

உத்தராகண்ட் மாநிலத்தில் மலை யடிவார பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

உத்தராகண்டின் யானி என்ற பகுதியில் இருந்து விகாஸ் நகருக்கு பயணிகள் பஸ் புறப் பட்டது. அந்த பஸ் தராஹர் என்ற மலைப்பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் பள்ளத்தில் உருண்டது.

இதில் 10 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் டேராடூன் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து ஆளுநர் கே.கே.பால், முதல்வர் ஹரிஷ் ராவத் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உத்தராகண்டில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் முக்கிய சாலை கள் சேதமடைந்துள்ளன. மலைப் பாங்கான பகுதிகளில் சாலைகள் கடுமையாக சேதமடைந்திருப்ப தால் அதிக விபத்துகள் நேரிடுவ தாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

SCROLL FOR NEXT