இந்தியா

கேஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஹசாரே மறுப்பு

செய்திப்பிரிவு

டெல்லியில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் பங்கேற்பீர்களா என்று மகாராஷ்டிர மாநிலம் ராலேகான் சித்தியில் அண்ணா ஹசாரேவிடம் செய்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை கேட்டபோது, “எனக்கு இன்னமும் அழைப்பிதழ் வரவில்லை” என்று பதில் அளித்தார்.

அழைப்பிதழ் வந்தால் பங்கேற்பீர்களா எனக் கேட்டபோது, “அது பற்றி டிசம்பர் 26-ம் தேதி பேசுவேன்” என்றார்.

விழாவில் பங்கேற்பது குறித்து மீண்டும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, “எனது உடல் நிலை சரியில்லாததால் அந்த விழாவில் பங்கேற்க மாட்டேன்” என்று தெரிவித்துவிட்டார்.

SCROLL FOR NEXT