இந்தியா

காஷ்மீரில் தீ விபத்து: சுரங்கத் தொழிலாளர்கள் 10 பேர் பலி

செய்திப்பிரிவு

காஷ்மீர் மாநிலம் ரம்பான் மாவட்டத்தில் சுரங்கப் பாதைக்கான பணி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளர்கள் 10 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் குறித்து ஜம்மு மாவட்ட போலீஸ் உயரதிகாரி தானிஷ் ராணா கூறும்போது, "ரம்பான் மாவட்டம் சந்தர்கோட் பகுதியில் தல்வாஸ் எனுமிடத்தில் சுரங்கப்பாதை பணி நடைபெற்று வருகிறது.

சுரங்கப்பாதை பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. தீ விபத்தில் சிக்கி 10 தொழிலாளர்கள் கருகி பலியாகினர். அவர்களது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்த நிலையில் உள்ளது. காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

இமாச்சலப் பிரதேசத்தின் ராகேஷ் குமார் என்பவரது உடல் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற உடல்களை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT