இந்தியா

75 தொகுதி வேட்பாளர்களை அறிவித்தது பாஜக: மோடி ராஜ்நாத் சிங் தொகுதி அறிவிப்பதில் தாமதம்

செய்திப்பிரிவு

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 75 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வியாழக்கிழமை இரவு வெளியிட்டது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் மத்தியப்பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் போட்டியிடுகிறார். எஸ்.எஸ். அலுவாலியா மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் போட்டியிடுகிறார்.

லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திலிருந்து விலகிய ராம் கிருபாள் யாதவ் பிஹார் மாநிலம் பாடலிபுத்திரா தொகுதியில் லாலு மகள் மிசா பார்தியை எதிர்த்துப் போட்டியிடு கிறார். யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT