இந்தியா

கோவாவில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

பிடிஐ

கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையை ஆளும் பாஜக நேற்று வெளியிட்டது.

தேர்தல் அறிக்கையை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டார். கோவா முதல்வர் லஷ்சுமிகாந்த் பர்சேகர், மத்திய அமைச்சர் ஸ்ரீபாத நாயக், கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

மருந்து தயாரிப்பு, மின்னணு சாதனம், தகவல் தொழில்நுட்பம் போன்ற மாசுபடுத்தாத வேலை வாய்ப்பை அதிகரிக்கும் தொழில்களுக்கு முன்னுரிமை தரப்படும். சுற்றுலா துறைக்கு தொழில்துறை அந்தஸ்து அளித்து சலுகைகள் அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT