இந்தியா

ராஜ்தானி ரயிலில் திருட்டு: 7 ஆர்பிஎப் போலீஸார் சஸ்பெண்ட்

பிடிஐ

பாட்னா ராஜ்தானி விரைவு ரயிலில் பயணிகளின் உடைமைகள் திருடு போன சம்பவத்தில் ரயில்வே போலீஸார் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

புதுடெல்லி- பாட்னா இடையே இயக்கப்படும் ராஜ்தானி விரைவு ரயில் (12310) நேற்று அதிகாலை 3.29 மணி அளவில் உத்தரபிரதேச மாநிலம் காம்கர் எனும் இடத்தில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த கொள்ளையர்கள் ரயிலின் பி7, பி8, ஏ3 மற்றும் ஏ4 ஆகிய பெட்டிகளுக்குள் ஏறி, பயணிகளின் உடைமைகளை திருடினர். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிட்டனர். அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் யாருக்கும் தங்களது உடைமைகள் கொள்ளை போனது தெரியவில்லை.

இதன்பிறகு இச்சம்பவத்தை அறிந்த பயணிகள், ரயில்வே போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து, ரயிலில் பயணி களின் பாதுகாப்புக்காக சென்ற உதவி காவல் ஆய்வாளர் உள்பட 7 ரயில்வே போலீஸாரை பணியிடை நீக்கம் செய்து, அதிகாரிகள் உத்தர விட்டனர். வழிப்பறி தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸில் வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT