இந்தியா

அயோத்தி ராமர் கோயிலில் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம்

பிடிஐ

அயோத்தியில் ராமர் கோயிலில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (புதன்கிழமை) சாமி தரிசனம் செய்தார்.

கிரிமினல் சதிக் குற்றத்துக்காக பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆஜரான அடுத்த நாளில் யோகி ஆதித்யநாத் ராமர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இன்று காலை அயோத்திக்கு வந்த முதல்வர் ஆதித்யநாத் சுமார் அரை மணி நேரம் ராமர் கோயிலில் இருந்தார். பின்னர் சரயு நதிக்கரையில் பூஜையில் ஈடுபட்டார். பிரசித்தி பெற்ற ஹனுமன்கரி கோயிலிலும் அவர் சாமி தரிசனம் செய்தார்.

யோகி ஆதித்யநாத்துடன் பாஜக தலைவர் தரம் தாஸ் உள்ளிட்டோர் இருந்தனர். பாபர் மசூதி வழக்கில் தரம் தாஸ் மீது கிரிமினல் சதி வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT