இந்தியா

சபீர் ஷாவுக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன்

பிடிஐ

10 ஆண்டுக்கும் மேற்பட்ட சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சபீர் ஷாவுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லியில் வரும் 6-ம் தேதி விசாரணை அதிகாரி முன்னிலை யில் ஆஜராகும்படி அதில் உத்தர விடப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2005, ஆகஸ்ட் மாதம், ஸ்ரீநகரை சேர்ந்த ஹவாலா டீலர் முகம்மது அஸ்லம் வானி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப் பட்ட விசாரணையின் அடிப்படை யில் வானி மற்றும் சபீர் ஷாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் சபீர் ஷாவுக்கு கடந்த சில ஆண்டுகளில் அமலாக்கத் துறை சம்மன் அனுப் பியது. ஆனால் அவர் ஆஜராக வில்லை.

SCROLL FOR NEXT