குடியரசு தினத்தை முன்னிட்டு, பஞ்சாப் மாநிலத்தின் வாகா சோதனைச் சாவடியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு பிஎஸ்எப் வீரர்கள் நேற்று இனிப்பு வழங்கினர்.
சுதந்திர தினம், தீபாவளி போன்ற முக்கிய நாட்களில் எல்லையில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவத்தினர் இனிப்புகள் வழங்குவது வழக்கம்.
இதுகுறித்து பிஎஸ்எப் அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி வாகா சோதனைச் சாவடியில் பாகிஸ்தான் எல்லைக் காவல் வீரர்களுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் இனிப்புகளும் பழங் களும் வழங்கினர். பாகிஸ்தான் வீரர்கள் இவற்றை பெற்றுக் கொண்டு கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்” என்றார்.