இந்தியா

தேர்தலில் வாய்ப்பு: பாஜக அழைப்புக்கு கங்குலி மறுப்பு

செய்திப்பிரிவு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தருவதாக, பாஜக விடுத்த அழைப்புக்கு, முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கங்குலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியிடம் இருந்து கங்குலிக்கு அழைப்பு வந்ததாகவும், பாஜக ஆட்சிக்கு வந்தால் கங்குலிக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி தருவதாக மோடி கூறியிருப்பதாகவும் செய்தி வெளியானது.

"ஆமாம். எனக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை. எனது முடிவை விரைவில் உங்களுக்கு தெரிவிக்கிறேன்" என கங்குலி கூறியதாக பெங்கால் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கங்குலி கூறுகையில், களத்தில் தமது பணி இருக்கும் என்று அவர்களிடம் (பாஜக) மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறினார்.

SCROLL FOR NEXT