தனித் தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி இன்று ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசு தெலங்கானா மசோதாவை நிறைவேற்ற முனைப்பு காட்டி வருவதா, ஆந்திர முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதோடு காங்கிரஸ் உறுப்பினர் பதவியையும் கிரண்குமார் ரெட்டி துறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆளுநர் நரசிம்மனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பார் என்றும் ஆந்திர முதல்வர் அலுவலக வட்டாரம் தெரிவிக்கின்றது.
முதல்வர் பதவியை கிரண்குமார் ராஜினாமா செய்வதற்கு 3 முதல் 4 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆதரவாக இருந்தாலும், கிரண்குமார் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
தெலங்கானா விவகாரத்தில் மத்திய அரசின் போக்கை பொறுத்திருந்து பார்ப்போம் என்று காத்திருந்த கிரண் குமார், இனிமேலும் பொறுமை காப்பதில் அர்த்தம் இல்லை என கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.